×

‘தமிழ்நாட்டில் பனங்கள் இறக்க அனுமதிக்க வேண்டும்’

சட்டப்பேரவையில் வணிக வரி மற்றும் செய்தித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன்(காங்கிரஸ்) பேசியதாவது: தமிழக மாநிலத்தின் மரமாக இருப்பது பனை மரம். இது கருப்பட்டி, பத நீர் என்று இன்னும் நிறைய பயன்களை நமக்கு தருகிறது. இது இயற்கையாக கிடைக்கும் பானங்கள். இதை பனம் பால் என்றும் கூறுவர். இதில் சுண்ணாம்பு கலந்தால் பதநீராக மாறுகிறது. தற்போது தமிழ்நாட்டில் பனங்கள் தடை செய்யப்பட்ட ஒன்றாக இருக்கிறது. பனைமரங்களை வெட்ட தடை இருப்பது பாராட்டக்கூடிய விஷயம். பனை மரங்களை பாதுகாக்கும் நம் அரசின் முயற்சிக்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் பனங்கள் இறக்க விதிக்கப்பட்டு இருக்கும் தடையை நிரந்தரமாக நீக்க வேண்டும் என்று பேசினார்.

  • சட்டப்பேரவை நிகழ்வில் மாற்றம்
    தமிழக சட்டப்பேரவையில் வரும் 13ம் தேதி காலை பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, கதர் கிராமத் தொழில்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் மானியக்கோரிக்கை விவாதமும், மாலை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், வனம் ஆகியவையும் மானியக் கோரிக்கையில் எடுத்து கொள்ளப்பட இருந்தன. தற்போது மாலையில் நடைபெற இருந்த சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், வனம் ஆகியவை 13ம் தேதி காலையில் எடுத்து கொள்ளப்படும். மாலையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை மானியக்கோரிக்கை எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது. இதற்கான அறிவிப்பை சட்டசபையில் நேற்று சபாநாயகர் மு.அப்பாவு வெளியிட்டார்.

The post ‘தமிழ்நாட்டில் பனங்கள் இறக்க அனுமதிக்க வேண்டும்’ appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Nanguneri ,MLA ,Ruby Manokaran ,Congress ,Legislative Assembly ,Tamilnadu ,
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து